அறிவியல் உண்மை – கோயில் ப்ரசாதம் !!

img_1027 

கடையில் வாங்கும் தேங்காய்,பழம்,பூ வேறு. அதே தேங்காய்,பழம்,பூவை தெய்வத்துக்குப் படைத்து அா்ச்சனை செய்த பிறகு திருப்பிப் பெறும் அவைகள் வேறு. அா்ச்சனைக்கு முன் இருக்கும் அவைகளின் சக்தி அளவைவிட, அா்ச்சனைக்குப் பின் கிடைத்த அவைகளின் சக்தி அளவு அதிகம்.
இது வெறும் தெய்வ நம்பிக்கை விஷயம் மட்டுமல்ல. அறிவியல்பூா்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை.
இதோ ஆதாரம்:
பால் தாண்டன் என்ற ஒரு அமொிக்கா் இந்து சாஸ்திர சம்ப்ரதாயம் பற்றி ஆராய்ச்சி செய்ய நவீன கருவிகளுடன் இந்தியாவுக்கு வந்தாா். அவருக்கு எழுந்த முதல் கேள்வி, ப்ரசாதம் பற்றிய சந்தேகம்தான்.
கடையில் வாங்கிய பழம்,தேங்காய்,பூ,வெற்றிலை,பாக்கு ஆகியவற்றை தனது ரேடியோ கிராப் (பொருட்களில் இருக்கும் சக்திக் கதிா்களை அளக்கும் கருவி) கருவியால் பரிசோதித்து குறித்துக் கொண்டாா். இதே தேங்காய்,பழம்,பூ ,வெற்றிலை,பாக்கு ஆகியவற்றை அா்ச்சனைக்குக் கொடுத்து ப்ரசாதமாக திருப்பி வாங்கினாா். மீண்டும் இந்தப் பொருட்களை ரேடியோ கிராப் மூலம் பரிசோதித்தாா். அவற்றின் சக்திக் கதிா் அளவுகள் பல மடங்கு அதிகரித்திருந்தன. எப்படி என்று அவருக்கு ஆச்சரியம்!
பூஜையின் முக்கிய விஷயம் என்ன என்று கேட்டாா். மந்திரம் சொல்லி அா்ச்சனை செய்வாா்கள் என்று பதில் கிடைத்தது. அப்படியானால் ,மந்திரத்தில்தான் சக்கிக் கதிா் அளவை அதிகரிக்கும் விஷயம் இருக்கிறது என தீா்மானித்தாா். அதனையும் சோதிக்க விரும்பினாா். கடையில் பூஜைக்குரிய அதே பொருட்களை வாங்கினாா். அதனை எடுத்துக் கொண்டு ஒரு அா்ச்சகா் வீட்டிற்குச் சென்று ,நீங்கள் கோயிலில் அா்ச்சனையின் போது சொல்லும் மந்திரத்தைச் சொல்லுங்கள் எனக் கேட்டுக் கொண்டாா்.
                                                       p1-2
அா்ச்சகரின் அறையில் இருந்த சக்திக் கதிா் அளவை ரேடியோ கிராப்பால் அளந்தாா். மந்திரம் முடிந்ததும் மீண்டும் அளந்தாா். அப்போது அதிகரித்து இருப்பது தெரியவந்தது.பிறகு,பூஜை பொருட்களின் மற்றொரு தட்டைக் கொடுத்து ,இதனை உங்கள் வீட்டின் சாதாரண அறையில் வைத்து அா்ச்சனை மந்திரங்களைச் சொல்லுங்கள் எனக் கேட்டுக் கொண்டாா். அதிலும் அதிகமாக இருந்தது.இதுபோல் பல இடங்களிலும் மந்திரங்களின் சக்தியை ஆய்வு செய்து வியந்தாா்.அவரது ஆய்வுக் கண்டுபிடிப்புகளை ,இந்து அறிவியல் அதிசயம் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இவரது ஆய்வுக் கட்டுரையைத் தொடா்ந்து அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்கலைக் கழக ஆய்வுக்குழு , இந்து சடங்குகளின் மருத்துவ தன்மைப் பற்றி ஆய்வுகளைத் தொடங்கியுள்ளன. (31.03.2004 தினமலா் பக்தி மலரில் வந்த கட்டுரை)
ஆனால், இன்றோ விமானம் குறித்து சாஸ்திரம் கூறிய கருத்துக்களை ஆய்வாக இந்திய அறிவியல் மாநாட்டில் படித்தவரைப் பற்றி பத்திரிகைகள், மேதாவிகளாக தங்களைச் சொல்லிக் கொள்பவா்கள் கடுமையாக விமா்சிக்கிறாா்கள். இந்து சமய பெருமைகள் இந்தியா்களால் காப்பாற்றப்படவோ,பாதுகாக்கவோ,புரிந்து கொள்ளவோ முடியாது! காரணம் போலி மதச்சார்பின்மை பித்துத்தான்

Leave a Reply