ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீடு வழக்கின் தீர்ப்பு எப்போது? பெரும் பரபரப்பு

jayaஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை இறுதிக்கட்டத்தை நெருங்கி வருவதால் இந்த வழக்கின் தீர்ப்பு வரும் மார்ச் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கர்நாடக ஐகோர்ட் நீதிபதி சி.ஆர்.குமாரசாமி முன்னிலையில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர்களின் தரப்பில் இறுதிவாதம் முடிந்துவிட்டது. இதையடுத்து அரசு வழக்கறிஞர் பவானிசிங் தனது இறுதி வாதத்தை விரைவில் தொடங்கவுள்ளார். அனேகமாக இன்னும் ஒரு வாரத்தில் பவானி சிங்கின் இறுதி வாரம் முடிந்துவிடும் என்றும் அதன்பின்னர் தீர்ப்பு தேதியை அறிவிக்கவுள்ளதாகவும் நீதிபதி குமாரசாமி தெரிவித்துள்ளார்.

பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஜெயலலிதா மீதான சொத்துகுவிப்பு வழக்கு 18 ஆண்டுகளாக நடந்து வந்தது. ஆனால் மேல்முறையீட்சு வழக்கை 3 மாதத்துக்குள் முடிக்குமாறு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இந்த உத்தரவை அடுத்து கர்நாடக ஐகோர்ட் நீதிபதி குமாரசாமி, தான் பொறுப்பேற்ற முதல் நாள் சொன்னபடி, 31 நாட்களில் இறுதிவாதத்தை முடிக்க வைத்துள்ளார்.

இந்த தீர்ப்பை பொறுத்துதான் ஜெயலலிதாவின் அரசியல் எதிர்காலம் அமையவுள்ளதால் இந்த தீர்ப்பை கேட்க தமிழக மக்கள் மட்டுமின்றி இந்தியாவே எதிர்பார்த்து காத்திருப்பதாக செய்திகள் கூறுகின்றன.

Leave a Reply