பள்ளி மாணவர்களிடையே உடல் ஆரோக்கியத்திற்கான முகாம்.

news

பள்ளி மாணவர்களின் உடல் ஆரோக்கியம் குறித்து சிறப்பு முகாம் ஒன்று துவரகா தாஸ் வைஸ்ணவா தாஸ் காட்சி தொடர்பியல் மாணவர்கள் நடத்திய முகாம் ஒன்றில் டாக்டர் அக்ஷா ரத்தன், உணவுமுறை வல்லுனர் பாஸ்கர், யோகா பயிற்சியாளர் அந்த்ரிக்ஷ் டாட்டியா, மற்றும் பள்ளி முதல்வர் சியமலா தேவி ஆகியோர் கலந்து கொண்டதாக செய்தி ஒன்று எங்கள் CTN ஊடகத்திற்கு வந்துள்ளது.

இதுபோன்று நன்மை பயக்கும் முகாம் நடத்திய அனைவரையும் CTN  சார்பில் பாராட்டு தெரிவித்துக்கொள்கிறோம். இதேபோல் பல முகாம்களை நடத்தி பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் உடல் ஆரோக்கியம் குறித்தும், ஊட்டச்சத்து மற்றும் யோகா முறை குறித்தும் விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்த நாங்கள் கோரிக்கை விடுக்கின்றோம்.

Leave a Reply