தலையில் நீர் கோர்த்து அவதிப்பட்டால்

14

தலையில் ‘நீர் கோர்த்து’க் கொண்டு, அதனால் தலைப் பாரம், தலைவலியால் அவதிப்படுபவர்கள் பலர். ஆனால் பொதுவாக ஆண்களைவிட பெண்களே தலையில் நீர் கோர்த்துக் கொள்ளும் பிரச்சினையால் அதிகம் கஷ்டப்படுகின்றனர்.

இன்றைய எந்திர வாழ்க்கையில், தங்களது முகத்தை அழகுபடுத்திக்கொள்ள ஆர்வம் காட்டும் பெண்களில் சிலர், தலையை பராமரிப்பதில் அதிகம் கவனம் செலுத்துவதில்லை. தலைக்குக் குளித்துவிட்டு சரியாக துவட்டாமல் இருப்பதால், அடிக்கடி நீர் கோர்த்து கொண்டு தலைவலி ஏற்படுகிறது. தலையைக் காயவைக்க குறைந்தது 5 நிமிடமாவது ஒதுக்கினால் மட்டுமே இப்பிரச்சினையைத் தவிர்க்க முடியும்.

தலையை காய வைத்ததும் நீர் கோர்த்துக் கொண்டிருப்பதைப் போலத் தோன்றினால் கொதிக்கும் நீரில் நுணா இலை, நொச்சி இலை, எருக்கம் இலை போட்டு ஆவி பிடிக்கலாம்.

இவ்வாறு மாதம் மூன்று முறை செய்துவர, தலையில் நீர் கோர்க்கும் பிரச்சினையில் இருந்து விடுபடலாம். தலை பாரமாக உள்ள வேளைகளில் சுக்குக் காபி, இஞ்சி டீ, சூப் போன்ற சூடான பானங்களைப் பருகலாம். தொடர்ந்து இந்தப் பிரச்சினை இருந்தால், மருத்துவரை அணுகி ஆலோசனை பெறலாம்.

Leave a Reply