தெலுங்கு திரையுலகின் உதவி இயக்குனர் பாலியல் புகாரில் கைது. பெரும் பரபரப்பு.

46319308.cmsதெலுங்கு பட உதவி இயக்குனர் ஒருவர் மனைவியிடம் இயற்கைக்கு மாறான செக்ஸ் உறவில் ஈடுபட முயன்றதாக கூறப்பட்டதை அடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்த ஆந்திர போலீஸார் அவரை சிறையில் அடைத்ததாக ஆந்திராவில் இருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

பிரபல இயக்குனர் ஒருவரிடம் உதவி இயக்குனராக இருந்த ஒருவர் தனது மனைவியிடம் இயற்கைக்கு முரணாக செக்ஸ் வைத்துக்கொள்ள முயற்சி செய்ததாக அவரது மனைவி நேற்று காவல்துறையினர்களிடம் புகார் செய்தார். இதை அடுத்து அந்த உதவி இயக்குனர் அதிரடியாக கைது செய்யப்பட்டு அவர் மீது செக்ஸ் டார்ச்சர் பிரிவின்படி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஏற்கனவே அவர் தன் மனைவியை வரதட்சணை கொடுமைப்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தற்போது இந்த புகார்களுக்கும் சேர்த்து வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இன்னும் சில நாட்களில் ஒரு பிரபல நடிகரின் திரைப்படத்தை இயக்கவிருந்த நிலையில் துரதிர்ஷ்டவசமாக செக்ஸ் புகாரில் சிக்கி சிறை சென்றதாக டோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Leave a Reply