ஸ்மார்ட் போன் திருட்டு இனி இல்லை!

theft_2317066f

ஸ்மார்ட் போன்கள் திருடு போகும் வாய்ப்பு இனி இல்லை என்னும் நிலை வருங்காலத்தில் வரலாம். இதற்கான தொழில்நுட்பம் கில் சுவிட்ச் என்று குறிப்பிடப்படுகிறது.

அடிப்படையில் இது ஸ்மார்ட் போனுக்கான சாப்ட்வேர் பூட்டு. போன் திருடப்படும் நிலையில் அல்லது தொலைத்து விடும் நேரத்தில் இந்த சாப்ட்வேரை இயக்குவதன் மூலம் போனில் உள்ள தனிப்பட்ட விவரங்களை எல்லாம் அழித்துவிடலாம்.

அப்படியே அந்த போனைச் செயலற்றதாகவும் ஆக்கலாம். ஆக, போன் கையில் கிடைத்ததும் அதில் உள்ள சிம் கார்டைத் தூக்கி வீசிவிட்டு சொந்த போன் போல் பயன்படுத்துவது இனி நடக்காது.

மற்றவர்களது போன் பிறரிடம் கிடைக்கும்போது அது பயனற்றதாகிவிடும் – இதுதான் கில் சுவிட்ச் சாப்ட்வேரின் மகிமை.

இதன் அவசியம் மற்றும் அமலாக்கம் குறித்து நிறைய விவாதம் நடைபெற்று அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

2013-ல் ஐபோனில் இது அறிமுகமானது. அதன் பிறகு சாம்சங் கேலக்ஸி எஸ் 5-ல் அறிமுகமானது. ஆண்ட்ராய்டு லாலிபாப்பில் இந்த அம்சம் இருக்கிறது.

இந்த அம்சம் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு அமெரிக்க நகரங்களில் ஸ்மார்ட் போன் திருட்டு குறைந்துள்ளது. இந்த சாப்ட்வேர் பூட்டு பரவலானால் ஸ்மார்ட் போன் திருட்டும் குறைந்து இல்லாமல் போகலாம்.

ஆனால் போனை மறந்து வைப்பதையோ, தொலைப்பதையோ இது குறைப்பதற்கான வாய்ப்பில்லை!

Leave a Reply