உலகின் மிகப்பெரிய பின்பக்கத்தை கொண்டவர் என்ற சாதனையை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை சேர்ந்த மிக்கேல் ரூபின்நெலி என்ற பெண் பெற்றுள்ளார். இவருடைய பின்பக்கத்தின் சுற்றளவு 8அடி உள்ளது என்று கூறப்படுகிறது.
நான்கு குழந்தைகளுக்கு தாயான 39 வயது மிக்கேல், தன்னுடைய உடல் எடையை குறைக்க தான் எவ்வித முயற்சியும் செய்யவில்லை என்றும், ஏனெனில் உடல் எடை அதிகரிப்பால் தனக்கு எவ்வித அசெளகரியங்களும், நோய்களும் இல்லை என்று தெரிவித்துள்ளார். இவருடைய உடல் அமைப்பிற்கேற்ப இவரது கார் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இவரது வீட்டில் டாய்லெட் முதல் நாற்காலி வரை இவரது உடல் அமைப்பிற்கேற்ப மாற்றியமைக்கப்பட்டதாக இவர் தனது பேட்டியில் கூறியுள்ளார்.
தன்னுடைய உடல் அமைப்பையும், உடல் பருமனையும் தான் மிகவும் நேசிப்பதாகவும், தன்னை கேலி செய்பவர்கள் குறித்து தனக்கு எவ்வித கவலையும் இல்லை என்றும் மிக்கெல் தெரிவித்துள்ளார். மிக்கெலை அடுத்து ஆஸ்திரியாவை சேர்ந்த கிளாடியா புளோரன்ஸ் என்ற 40 வயது பெண் இரண்டாவது பெரிய பின்பக்கத்தை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.