முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி கராத்தே வீரர் தன்னைத்தானே சிலுவையில் அறைந்து கொண்ட செய்தி அதிமுகவினரை மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் ஜெயலலிதா இவ்விதமான அபாயகரமான நடவடிக்கைகளுக்கு செல்ல வேண்டாம் என்று ஹுசைனிக்கு அறிவுரை கூறி கடிதம் எழுதியுள்ளார்.
ஜெயலலிதா எழுதிய கடிதத்தில், “தமிழ்நாட்டில் நான் மீண்டும் முதலமைச்சர் ஆவதற்காக, நீங்கள் உங்களை வருத்திக்கொண்டு சிலுவையில் அறைந்து கொண்ட செயல், என்னை ஆழ்ந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
உங்களுடைய ஆதரவை எதிர்பார்த்தாலும், எல்லையை தாண்டி இதுபோன்று உங்களை வருத்திக்கொள்வதை தவிர்க்க வேண்டும். என்னிடம் காட்டிய கருத்தினைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுடைய வாழ்க்கைக்கு அபாயகரமான நடவடிக்கைக்கைக்கு செல்ல வேண்டாம்” என்று தனது கடிதத்தில் ஜெயலலிதா கூறி உள்ளார்.