அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள ஒரு தம்பதிக்கு ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகள் பிறந்தன. மற்ற குழந்தைகள் போலில்லாமல் இந்த இந்த குழந்தைகளுக்கு உடம்புமட்டும்தான் இரண்டு இருந்ததே தவிர இதயம், கணயம், குடல், கல்லீரல் மற்றும் முக்கிய உறுப்புகள் அனைத்தும் ஒன்றே ஒன்றுதான் இருந்தது. இருப்பினும் அமெரிக்காவில் உள்ள மருத்துவர்கள் குழு இந்த ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகளை பிரித்து சாதனை புரிந்துள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள ஹோப் மற்றும் பெயித் மதா ஆகிய தம்பதிகளுக்கு கடந்த 10 மாதங்களுக்கு முன்னர் ஒட்டியவாறு இரட்டை குழந்தைகள் பிறந்தன. இந்த இரண்டு குழந்தைகளுக்கும் சேர்த்து முக்கிய உறுப்புகள் அனைத்தும் ஒன்றே ஒன்று இருந்ததால் இவர்களை பிரிப்பதில் டாக்டர்களுக்கு பெரும் சவாலாக இருந்தது.
இருப்பினும் 26 டாக்டர்கள், 12 அறுவை சிகிச்சை நிபுணர்கள், 8 நர்ஸ்கள் கொண்ட குழு ஒன்று தொடர்ந்ச்சியாக 26 மணி நேரம் செய்த அறுவை சிகிச்சையின் காரணமாக இந்த குழந்தைகள் பிரிக்கப்பட்டது. ஒரு குழந்தைக்கு இயற்கையான உறுப்புகளும், மற்றொரு குழந்தைக்கு செயற்கையான் உறுப்புகளும் பொருத்தப்பட்டது. இந்த இரண்டு குழந்தைகளும் தற்போது தீவிரசிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றன. எந்தவித பிரச்சனையும் இல்லாமல் இரு குழந்தைகளும் பிரிக்கப்பட்டதால் இந்த குழந்தைகளின் பெற்றோர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.