பா.ஜ.க. எம்.பி. மீனாட்சி லேகி, இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறும்போது, ”இதுபோன்ற கருத்துகளை அரசியல் ஆக்கக் கூடாது. யாரையும் உங்கள் விருப்பம் போல் வர்ணிக்காதீர்கள் என்று சோனியாவுக்கும், ஜோதிர்ஆதித்ய சிந்தியா உள்ளிட்டோருக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன்.
அன்னை தெரசா பற்றி காங்கிரஸ் விசுவாசி நவீன் சாவ்லா எழுதிய புத்தகத்தை படித்துப்பாருங்கள். அதில், அன்னை தெரசா அளித்த ஒரு பேட்டியில், அவர் மத மாற்றத்தில் ஈடுபட்டதை அவரே ஒப்புக் கொண்டுள்ளார். அதில், ‘என்னை சமூக சேவகி என்று நினைத்து மக்கள் குழப்பிக் கொள்கிறார்கள். நான் சமூக சேவகி அல்ல. நான் கர்த்தருக்காக சேவை செய்து வருகிறேன். கிறிஸ்தவ மத கருத்துகளை பரப்புவதும், மதத்துக்குள் மக்களை கொண்டு வருவதும் தான் எனது பணி’ என்று அன்னை தெரசா கூறியுள்ளார்.
அதேநேரம், மோகன் பகவத் கருத்தை நான் நியாயப் படுத்துவதாக கருதக்கூடாது. அதற்கு நான் யார்? அவரது கருத்துகளுடன் எனக்கோ, மத்திய அரசுக்கோ எந்த சம்பந்தமும் இல்லை” என்றார்.