வங்கி விடுமுறை நாட்களில் திடீர் மாற்றம்.

bank holidayவங்கிகளுக்கு இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் முழுநேர விடுமுறை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

வங்கி ஊழியர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை ஒன்றில் வங்கி ஊழியர்கள் விடுத்த வாரத்திற்கு ஐந்து நாள் வேலை திட்டம் குறித்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி ஒவ்வொரு மாதமும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் வங்கிகளுக்கு விடுமுறை என்றும், அதற்கு பதிலாக முதலாவது மற்றும் மூன்றாவது சனிக்கிழமைகள் முழுமையாக செயல்படும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த முடிவுகள் இந்திய ரிசர்வ் வங்கியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், ரிசர்வ் வங்கி அனுமதி கொடுத்தவுடன் இந்த விடுமுறைகள் கடைபிடிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இதுதவிர அனைத்து அரசு விடுமுறை நாட்களிலும் வங்கிகள் இயங்காது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply