பாஜக அரசின் முதல் முழுமையான ரயில்வே பட்ஜெட். இன்று தாக்கல்

railwayகடந்த ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தனிமெஜாரிட்டி பெற்று ஆட்சியில் அமர்ந்த பாரதிய ஜனதா கட்சி இன்று முழுமையான முதல் ரயில்வே பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறது. இந்த பட்ஜெட்டில் புதிய ரயில்கள் மற்றும் சலுகைகள் இருக்குமா? என்பது இன்னும் சில நிமிடங்களில் தெரிந்துவிடும்.

இன்று  ரயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபு  தாக்கல் செய்யும் ரயில்வே பட்ஜெட் வழக்கமான ரயில்வே பட்ஜெட்டுகளைவிட, பல  மாற்றங்களும், கட்டுப்பாடுகளும் இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பட்ஜெட்டில் ரயில் கட்டண உயர்வு பெரிய அளவில் இருக்க வாய்ப்பில்லை என்றாலும் சரக்கு ரயில் கட்டணம் ஓரளவு உயர்த்தப்பட வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது.  இதற்கு முன் இல்லாத வகையில்,  பசுமைத் திட்டங்களும் இந்த ரயில்வே பட்ஜெட்டில் இடம் பெறவுள்ளதாக  ரயில்வே அமைச்சக வட்டாரங்கள் கருத்து தெரிவித்துள்ளன.

முதல்முறையாக ரயில் பெட்டிகள், ரயில் நிலைய வளாகங்களில், வெளிச்சத்திற்காக, சூரிய மின்சக்தி திட்டங்கள் ஏற்படுத்தப்படுவது போல, ரயில்வே தொழிற்சாலைகள், பணிமனைகளிலும், சூரிய மின் உற்பத்தி அமைப்புகள் ஏற்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

Leave a Reply