உலகில் முதல்முறையாக கே.எப்.சி அறிமுகப்படுத்தும் சாக்லேட் காபி கப்.

KFC cupஇதுவரை நாம் காபியை குடித்துவிட்டு காபி கப்பை தூக்கி குப்பையில்தான் எறிவோம். ஆனால் இனிமேல் காபி கப்பையும் சாப்பிடலாம். ஆம் கேஎப்சி நிறுவனம் முதன்முறையாக சாக்லேட் காபி கப் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கப்பில் காபியை குடித்தவுடன் அந்த கப்பையும் கடித்து சாப்பிடலாம். இந்த புதுவகையான காபி கப், குழந்தைகள் மட்டுமின்றி இளைஞர்களையும் வெகுவாக கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

KFC cup 2

பிரிட்டனில் உள்ள கே.எப்.சி. நிறுவனம் முதல்முறையாக இந்த காபி கப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. காபியின் வெப்பத்தை தாங்கும் வகையில் இந்த சாக்லேட் கப் அமைக்கப்பட்டிருப்பதுதான் இதன் சிறப்பு. அதுமட்டுமின்றி விதவிதமான வாசனையுடனும் இந்த கப் அமைக்கப்பட்டுள்ளது. டிஸ்போசல் காபி கப் காரணமாக சுற்றுச்சூழல் சுகாதாரம் பாதிக்கப்படுவதையும் இந்த காபி கப் தவிர்க்கின்றது.

KFC cup 1

உணவுவகை நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து ‘தி ராபின் கலெக்டிவ்’ என்ற நிறுவனம் இந்த புதியவகை சாக்லேட் கப்பை தயாரித்துள்ளது. பிரிட்டன் கே.எப்.சி நிறுவனர் ஜாக்குலைன் பெய்னாய் அவர்கள் இந்த கப் குறித்து கூறும்போது, ‘புதிய முயற்சியாக இந்த சாக்லேட் காபி கப்பை அறிமுகப்படுத்தியுள்ளோம். இதற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து அனைத்து கே.பி.சி கிளைகளிலும் இந்த சாக்லேட் கப் அறிமுகப்படுத்தப்படும்’ என்று கூறியுள்ளார்.

Leave a Reply