சத்தீஷ்கர் மாநிலத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்ட மூன்று அரசு ஊழியர்களை டிஸ்மிஸ் செய்து அம்மாநில அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதால் அரசு ஊழியர்களிடையே பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
சத்தீஷ்கர் மாநிலத்தில் அரசு ஊழியர்கள் இரண்டு குழந்தைகளூக்கு மேல் பெற்றுக்கொள்ள தடை விதிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் மூன்றாவது குழந்தை பெற்றுக்கொண்டவர்கள் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் நேற்று மூன்று சுகாதார ஊழியர்கள் மீது திடீரென அரசு டிஸ்மிஸ் நடவடிக்கையை எடுத்துள்ளது. இவர்கள் மூவருக்கும் சமீபத்தில் மூன்றாவது குழந்தை பிறந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நடவடிக்கை காரணமாக அரசு ஊழியர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் வேலை பறிபோன மூன்று ஊழியர்களின் குடும்பத்தினர்களும் இன்று கவர்னர் மாளிகை முன்பு போராட்டம் நடத்தி வருவதாகவும், இந்த விஷயத்தில் கவர்னர் தலையிட்டு தங்களுக்கு திரும்பவும் வேலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்