மைக்ரோசாப்ட் தனது லூமியா 532 இரட்டை சிம் ஸ்மார்ட் போன்களை அதிக சத்தமில்லாமல் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. கடந்த மாதம் மைக்ரோசாப்ட் லூமியா 435 மற்றும் லூமியா 435 இரட்டை சிம் போனுடன் இது அறிமுகமானது.
மைக்ரோ சிம்கார்டுகள் கொண்ட இது விண்டோஸ் 8.1 -ல் இயங்குகிறது. லூமியா டெனிம் அப்டேட் கொண்ட இது ஹியர் மேப்ஸ் வரைபடம், வேர்டு, எக்செல், பவர்பாயிண்ட் உள்ளிட்ட சேவைகளையும் கொண்டுள்ளது.
அவுட்லுக், ஸ்கைப் மற்றும் ஒன் டிரைவ் ஆகிய சேவைகளையும் உள்ளடக்கியிருக்கிறது. நான்கு அங்குல எல்சிடி டிஸ்பிளே கொண்டிருக்கிறது. இதன் பேட்டரி 12 மணி நேர டாக்டைம் மற்றும் 528 மணிநேர ஸ்டாண்ட்பை டைம் கொண்டதாகச் சொல்லப்படுகிறது.
5 மெகாபிக்சல் பின்பக்க காமிரா மற்றும் 0.3 மெகாபிக்சல் முன்பக்க காமிராவைக் கொண்டுள்ளது. ஒலி சென்சார், ஆக்சலரோமீட்டர் ஆகிய அம்சங்களும் இதில் உள்ளன. இதன் விலை ரூ.6,499.