ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை. மீண்டும் தமிழக மீனவர்கள் சிறைப்பிடிப்பு. இலங்கை கடற்படை அட்டூழியம்.

fishermenஇலங்கையில் கடந்த சில நாட்களுக்கு பின்னர் நடந்த அதிபர் தேர்தலில் இலங்கை தமிழர்களுக்கும், தமிழக மீனவர்கள்களுக்கும் எதிராக செயல்பட்ட ராஜபக்சே தோல்வி அடைந்து புதிய ஆட்சி பொறுப்பேற்றவுடன் தமிழக மீனவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோதிலும் தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு தொடர்வதால் தமிழக மீனவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. நேற்று இந்திய கடல்பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த 43 மீனவர்களை சிறைபிடித்து இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளது.

நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் மீனவர்கள் நேற்று காலை வழக்கம்போல மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். அவர்கள் கோடியக்கரை அருகே இந்திய கடல்பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது, அதே பகுதியில் இலங்கையை சேர்ந்த தமிழ் மீனவர்களும் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது இலங்கை தமிழ் மீனவர்களுக்கும் தமிழக மீனவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதகவும், இந்த மோதலில் தமிழக மீனவர்களின் வலைகள் அறுத்து எறியப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், அந்த பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர் காரைக்கால், நாகப்பட்டினம் மீனவர்களை சுற்றி வளைத்து கைது செய்ததோடு அவர்கள் பயன்படுத்திய 5 படகுகளையும் சிறைபிடித்தனர்.

விசாரணைக்கு பின், அவர்கள் எல்லை தாண்டி வந்ததாகவும், தங்கள் நாட்டு மீனவர்களை தாக்கியதாகவும் வழக்குப்பதிவு செய்து 43 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Leave a Reply