ஆசியாவின் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் 6 இந்தியர்கள். சர்வே விபரம்

surveyஇந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக பெண்கள் அபரீதமான வளர்ச்சியை பெற்று வருகின்றனர். கல்வியில் மட்டுமின்றி தொழில்துறையிலும் பெண்களின் வளர்ச்சி குறிப்பிடத்தக்க அளவில் இருப்பதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. இந்நிலையில் ஆசியாவின் சக்தி வாய்ந்த 50 பெண்கள் என எடுக்கப்பட்ட ஒரு சர்வேயில் இந்தியாவின் 6 பெண்கள் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல ஆங்கில ஊடகம் போர்ப்ஸ் சமீபத்தில் ஆசியாவின் சக்திவாய்ந்த 50 பெண்கள் என்ற சர்வேயை எடுத்தது. இந்த சர்வேயில் இந்தியாவை சேர்ந்த அருந்ததி பட்டாச்சார்யா(58), சந்தா கோச்சார்(53), கிரண் மசூம்தார் ஷா(61), ஷிகா ஷர்மா(56), அகிலா ஸ்ரீனிவாசன், உஷா சங்வன்(56) ஆகிய ஆறு இந்திய பெண்கள் இடம்பெற்றுள்ளனர்.

சர்வேயில் இடம்பிடித்துள்ள ஆறு பெண்கள் குறித்து தற்போது பார்ப்போம்.

அருந்ததி பட்டாச்சார்யா: இந்திய வங்கித் துறையின் முதல் பெண்மணி என அழைக்கப்படும் இவர் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா என்ற வங்கியின் தலைவர். இவர் 18 லட்சம் கோடி ரூபாய் சொத்துள்ள வங்கியையும், 22.50 கோடி வாடிக்கையாளர்களையும் நிர்வகித்து வருகிறார்.

சந்தா கோச்சார்: வங்கித் துறையில் சக்தி மிக்க இரண்டாவது பெண் என்ற சிறப்புக்குரிய இவர் ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின்  தலைமை செயல் அதிகாரி. இளைய சமுதாயத்தின் வங்கிச் சேவைக்கு, பல முன்னோடி திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளார்.

கிரண் மசூம்தார் ஷா: உயிரி மருந்துகளை தயாரிக்கும் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர்,

ஷிகா ஷர்மா: ஆக்சிஸ் வங்கியின் தலைவர். 2014 ஆம் ஆண்டு டிசம்பர் இறுதி நிலவரப்படி, வங்கியின் மொத்த டிபாசிட்டை, 2.76 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்த பெருமை இவருக்கு உண்டு.

உஷா சங்வன்:  இந்தியாவின் காப்பீட்டு நிறுவனத்தின் முதல் பெண் நிர்வாக இயக்குநர் என்ற சிறப்பை பெற்றவர்.

அகிலா ஸ்ரீனிவாசன்: ஸ்ரீராம் லைப் இன்சூரன்ஸ், ஸ்ரீராம் கேபிட்டல் ஆகிய நிறுவனங்களின்  நிர்வாக இயக்குநர்.  79,800 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை கொண்ட ஸ்ரீராம் குழுமத்தில், 29 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றுபவர் என்று போர்ப்ஸ் இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply