வாக்களிக்காத ஸ்ரீரங்கம் மக்களுக்கும் நன்றி. மு.க.ஸ்டாலின் பேச்சு

stalin trichy meeting 11சமீபத்தில் நடைபெற்ற ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் திமுக தோல்வி அடைந்தாலும் டெபாசிட் வாங்கிய ஒரே எதிர்க்கட்சி என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்நிலையில் ஸ்ரீரங்கம் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் ஒன்று நேற்று மாலை தேவி தியேட்டர் அருகே நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.

“ ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வாக்களித்தவர்களுக்கு மட்டுமில்லாமல், வாக்களிக்க தவறியவர்களுக்கும் நன்றி கூறிக்கொள்கிறேன். வாக்களிக்காதவர்கள் நிச்சயமாக வரும் காலகட்டத்தில் வாக்களிப்பார்கள் என்ற உணர்வோடு அவர்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன். கடந்த தேர்தலை விட 600 வாக்குகள் அதிகம் பெற்றிருப்பதிலிருந்து தமிழக மக்களிடம் மாற்றம் துவங்கியிருப்பது தெரிகிறது” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “ இடைத்தேர்லில் வெற்றி பெற்றுவிட்டதாக கொக்கரிக்கும் அதிமுக,  திமுக ஆட்சியில் நடைபெற்ற 5 இடைத்தேர்தல்களில் போட்டியிடவில்லை. 2 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை பட்டுவாடா செய்யப்பட்டது. இதுதான் அதிமுக வெற்றிக்கு காரணம்.

ஜெயலலிதாவுக்கு சதி என்கிற வார்த்தை ரொம்ப பிடிக்கும் கடந்த இடைத்தேர்தலுக்கு முன்பு ஜெயலலிதா ஸ்ரீரங்கம் தொகுதி மக்களுக்கு ஒரு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில் பெங்களூரு சொத்துக்குவிப்பு வழக்கு ஒரு சதி என்றும் குறிப்பிட்டிருந்தார். ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய நான்கு பேர் கூட்டாக சேர்ந்து ஆட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி 66 கோடி சொத்து குவித்தது சதி. அதற்கு பெங்களூரு தனி நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பு விதி. ஜெயலலிதாவுக்கு சதி என்றால் மிகவும் பிடிக்கும். எம்ஜிஆர் பற்றி ராஜீவ்காந்திக்கு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில் எனது பெருமைகளை பயன்படுத்தி, என்னை அவமானப்படுத்தி எம்ஜிஆர் சதி செய்கிறார் என அதில் குறிப்பிட்டார்.

அதேபோல் ஜானகி அம்மையார், நரசிம்மராவ் உள்ளிட்டோர் தனக்கு எதிராக சதி செய்வதாக கூறினார். மின்வாரியத்தில் திமுகவுக்கு ஆதரவாக உள்ள அதிகாரிகள் சதி செய்வதால்தான் சீரான மின்சாரம் வழங்க முடியவில்லை என்றார். இப்படி அடுத்தடுத்து அடுத்தவர்கள் மீது பழிபோட ஜெயலலிதாவுக்கு சதி என்றால் மிகவும் பிடிக்கும்.

சட்டமன்றத்தில்  தேமுதிகவை குடிமகன் என்று குறிப்பிட்டு அதிமுகவினர் பேசியதை அவைக் குறிப்பிலிருந்து நீக்க சபாநாயகர் மறுத்தார். ஆனால், தேமுதிக துணைத்தலைவர் மோகன்ராஜ் “குற்றவாளி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா” என்று பேசியதற்காக ஒட்டுமொத்தமாக தேமுதிக எம்எல்ஏக்களை கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்துள்ளனர்.

இது தவறு என நான் வாதிட்டேன். மறுநாள் பத்திரிக்கையில் ஸ்டாலின் கேட்டதால் தேமுதிக எம்எல்ஏ சஸ்பெண்ட் ரத்து என செய்தி வெளிவந்ததை பார்த்து போயஸ்கார்டனில் ஜெயலலிதா கொதித்துவிட்டார். பிறகு மீண்டும் அனைவரும் சஸ்பெண்ட் என்று கூறினர். ஏன் இப்படி செய்கிறீர்கள் என கேட்டபோது, நாங்கள் சஸ்பெண்ட் ரத்து என கூறவில்லையே என்றனர்.

ஒரு எம்எல்ஏ, குற்றவாளி என கூறியதால், ஒட்டுமொத்தமாக அந்த கட்சி எம்எல்ஏக்களை சஸ்பெண்ட் செய்வது என்ன நியாயம்? அப்படி பார்த்தால் சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டனை பெற்றதால் ஸ்ரீரங்கம் தொகுதி காலியாக இருப்பதாக கெஜட்டில் அறிவித்து சபாநாயகர் தனபால், செயலாளர் கமாலுதீன் கையெழுத்திட்டுள்ளனர். அதற்காக சபாநாயகரை நீக்குவார்களா?

முதல்வர் ஓபிஎஸ், அதிமுக ஆட்சியில் மகளிர் சுய உதவிக்குழு முன்னேற்றம் அடைந்துள்ளதாக கூறு கிறார். அப்படி கூறுவதற்கு தகுதி இருக்கிறதா அவருக்கு. அதிமுக ஆட்சி வந்தால் உதவிக் குழுக்களுக்கு ரூ.10லட்சம் கடன் அளித்து, 25 சதவீதம் மானியம் வழங்கப்படும் என உறுதிமொழி கொடுத்தார். அவர் கூறியபடி எந்த ஒரு மகளிர் குழுவுக்காவது கடன் வழங்கப்பட்டுள்ளதா.

கடந்த காலங்களில் ஜெயலலிதா 3 வருட ஆட்சியில் 110 விதியின் கீழ் ஏராளமான திட்டங்களை சட்டமன்றத்தில் அறிவித்தார். அந்த விதியின் கீழ் திருச்சி-சேலம் தேசிய நெடுஞ்சாலை திட்டம் அறிவிக்கப்பட்டது. அதற்கான எந்த ஒரு முயற்சியும் தற்போது வரை எடுக்கப்படவில்லை. திருச்சியில் 100 கோடி ரூபாய் மதிப்பில் சிங்கப்பூர் போன்று தொழில் நுட்ப பூங்கா அமைக்கப்படும் என்றார். நடக்கவில்லை. திருச்சியில் மோனோ ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டது. கடந்த 4 ஆண்டுகளில் 1,27,500.98 கோடி அளவிற்கு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இதில் எந்த திட்டத்தை நிறைவேற்றினர். எதுவும் நடக்கவில்லை. நான் ஆதாரத் தோடுதான் பேசுகிறேன். தைரியமிருந்தால் இந்த மேடைக்கு பக்கத்தில் ஒரு மேடை போட்டு விவாதிக்க தயாரா?”

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

Leave a Reply