திருப்பதி: திருமலையில் உள்ள, நாதநீராஜன மண்டபம் எதிரில், சிலுவைக்குறி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. திருமலை, ஏழுமலையான் கோவில் அருகில், தேவஸ்தானம், நாதநீராஜன மண்டபத்தை அமைத்துள்ளது. இங்கு நாள்தோறும், மாலை 6:00 மணிக்கு, கர்நாடக சங்கீத கலை நிகழ்ச்சி நடத்தப்படும். இந்த மண்டபத்திற்கு எதிரில் உள்ள, சிமென்ட், ‘ப்ளாக்’கில் சிலுவைக்குறி ஒன்று திடீரென வைக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து, விசாரணை நடத்த தேவஸ்தானம், விஜிலென்ஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளது. இதுகுறித்து தேவஸ்தான தலைமை பொறியாளர் சந்திரசேகர் கூறியதாவது: புதிய கட்டடம் கட்டப்படும்போது, முக்கிய பகுதிகளில், ‘ப்ளஸ்’ குறியிடப்படும். அந்த குறி, கட்டடம் கட்ட உள்ள நிலத்தின் மீதும் போடப்படும். அவ்வாறு போடப்பட்ட, ‘ப்ளஸ்’ குறி தான், நாத நீராஜனம் மண்டபம் அருகில் காணப்பட்டது. எனவே, அங்கிருந்தது சிலுவை குறி அல்ல. இவ்வாறு, அவர் கூறினார்.