ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் சுட்டுக்கொலை. அதிபர் புதின் கண்டனம்

Medics carry the body of Boris Nemtsov, who was shot dead, in central Moscowரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவரும், பிரபல அரசியல்வாதியுமான போரீஸ் நெம்ட்சோவ் இன்று அதிகாலை சுட்டுக்கொல்லப்பட்டார். அவருக்கு வயது 55. சுட்டுக்கொல்லப்பட்ட போரீஸ் அவர்களுக்கு ரைசா அகமெட்டோனா என்ற மனைவியும் நான்கு குழந்தைகளும் உள்ளனர்.

ரஷ்யாவின் முன்னாள் பிரதமராக இருந்த போரிஸ் தற்போது எதிர்க்கட்சி தலைவராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய உடலில் நான்கு குண்டுகள் பாய்ந்துள்ளதாகவும், உயிருக்கு போராடிய இவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மரணம் அடைதுவிட்டதாகவும் மாஸ்கோவில் இருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

மத்திய ரஷ்யாவில் உள்ள கெரமிலின் என்றபகுதியில் பாலம் ஒன்றை போரீஸ் சென்ற கார் சென்று கொண்டிருக்கையில் பின்னால் வந்த ஒரு காரில் இருந்த மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமின் புதின், இந்த கொலை சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply