டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்றவுடன் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று முன் தினம் சிக்கி இளம்பெண் ஒருவர் டெல்லியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக திடுக்கிடும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
சிக்கிம் மாநிலத்தை சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவர் கடந்த 20ஆம் தேதி வேலை நிமித்தமாக டெல்லி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன் தினம் காலை 6மணியளவில் வாக்கிங் சென்று கொண்டிருந்தபோது, எய்ம்ஸ் டாக்டர் ஒருவர் சிக்கிம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பியோடி உள்ளார். இதுகுறித்த தகவல் அறிந்ததும் இளம்பெண் கூறிய அடையாளங்களை வைத்து எய்ம்ஸ் டாக்டரை போலீஸாரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட டாக்டர் மெஹர் தேஸ் என்ற 27 வயது இளைஞர் என்றும், ஐதராபாத்தை சேர்ந்த இவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர்தான் திருமணம் செய்து கொண்டவர் என்றும் விசாரணையில் தெரியவந்தது.
டாக்டர் ஒருவர் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட விவகாரம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.