உலகக்கோப்ப்பை கிரிக்கெட் போட்டி: பாகிஸ்தானுக்கு முதல் வெற்றி

Pakistan v Zimbabwe - 2015 ICC Cricket World Cupஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல்வெற்றியை பாகிஸ்தான் நேற்றைய போட்டியில் பெற்றுள்ளது. நேற்று ஜிம்பாவே அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தனது புள்ளிக்கணக்கை தொடங்கியுள்ளது.

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 235 ரன்கள் எடுத்தது. மிஸ்பா உல் ஹக் 73 ரன்களும், வாஹெப் ரியாஸ் 54 ரன்களும் எடுத்தனர்.

வெற்றி பெற 236 ரன்கள் தேவை என்ற இலக்குடன் களத்தில் இறங்கிய ஜிம்பாவே அணி 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 215 ரன்கள் மட்டுமே எடுத்ததால் ஜிம்பாவே 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஜிம்பாவே அணியின் டெய்லர் 50 ரன்களும், சிகும்புரா 35 ரன்களும் எடுத்தனர். பாகிஸ்தான் அணியின் வாஹெப் ரியாஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்

Leave a Reply