அஜீத்-ஷாலினி தம்பதிக்கு ஆண் குழந்தை. ரசிகர்கள் வாழ்த்து.

ajith and shaliniதமிழ் திரையுலகில் தல என்று அன்போடு அழைக்கப்படும் நடிகர் அஜித் – ஷாலினி தம்பதிக்கு இன்று அதிகாலை 4.30 மணியளவில் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. அஜீத் தம்பதிகளுக்கு திரையுலகினர்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சரண் இயக்கிய அமர்க்களம் படத்தில் அஜீத்- ஷாலினி நடித்தபோது ஏற்பட்ட காதலை அடுத்து இருவருக்கும் கடந்த  2000 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் நடந்தது. இவர்களுக்கு கடந்த 2008 ஆம் ஆண்டு ஜனவரி 3 ஆம் தேதி அனோஷ்கா என்ற அழகான பெண் குழந்தை பிறந்த நிலையில் தற்போது இரண்டாவது குழதை பிறந்துள்ளது.,

நேற்றிரவு ஷாலினிக்கு பிரசவ வலிவந்ததை அடுத்து அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இன்று அதிகாலை அவருக்கு ஆண் குழந்தை பிறந்ததாகவும், தாயும் சேயும் நலமாக இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply