இந்தியாவில் உள்ள ஜார்கண்ட் மாகாணத்தில் 10 மாத குழந்தை ஒன்று 13.5 கிலோ எடையுடன் இருப்பதாகவும், அந்த குழந்தையின் எடை குறித்து பெற்றோர் மிகுந்த கவலையுடன் இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
ஜார்கண்ட் மாகாணத்தை சேர்ந்த ஷபனா பர்வின் என்ற பெண்ணுக்கு கடந்த வருடம் ஆண் குழந்தை பிறந்தது. பிறக்கும்போதே 5கிலோ எடையுடன் இருந்த இந்த குழந்தை ஒருசில வாரங்களில் மிக அதிக எடையுடன் காணப்பட்டது. தற்போது பத்து மாதங்களே ஆன நிலையில் அந்த குழந்தை 15.512 கிலோ எடையுடன் உள்ளது.
குழந்தையின் தந்தை முகம்மது சலீம், உள்ளூர் மருத்துவமனையில் குழந்தைக்கு சிகிச்சை செய்ததாகவும், ஆனால் அவர்களால் குழந்தையின் எடை அதிகமாவதற்கு சரியான காரணத்தை கண்டறிய முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.
இதுகுறித்து அருகில் உள்ள நகரின் பெரிய மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்து சென்று காண்பிக்க தனக்கு பணவசதி இல்லை என்றும் அரசு தனக்கு உதவி செய்யவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
சலீமின் வேண்டுகோளை அடுத்து டெல்லியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை செய்ய ஜார்கண்ட் அரசு உதவி செய்துள்ளது. தற்போது டெல்லியில் சிகிச்சையில் இருக்கும் இந்த குழந்தை விரைவில் நார்மல் குழந்தையின் எடைக்கு திரும்பும் என பெற்றோர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.