பென் டிரைவ் அளவில் இருக்கிறது இந்த கீ போர்ட். ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லட்களுக்கு பயன்படுத்துவதற்கு என்றே வடிவமைக்கப்பட்டுள்ளது. வே டூல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த கீபோர்ட் பெயர் டெக்ஸ்ட் பிளேடு.
நான்கு நான்கு பட்டன்களாக, இரண்டு இணைப்புகளில் மொத்தமே எட்டு பட்டன்கள்தான். அதிலேயே அனைத்து எழுத்துக்களும் அடங்கியுள்ளன. ஸ்பேஸ் பட்டன் வொய்-பை டிவைஸாக இயங்குகிறது. டிவைஸில் உள்ள காந்த சக்தி மூலம் கீ போர்டும் இணைந்து கொள்வதால் கீ போர்டில் டைப் செய்யும்போது அலுங்காது.
டைப் செய்ய வேண்டுமென்கிற போது இந்த டெக்ஸ்ட் பிளேடை பிரித்து டேப்லெட் அல்லது மொபைல் போனில் உள்ள செயலியை ஆன் செய்து கொண்டால் போதும். கம்ப்யூட்டர் மானிட்டரில் டைப் செய்வது போல வேலையை சுலபமாக முடித்து விடலாம்.
கீ போர்டில் டைப் செய்து கொண்டிருக்கிறோம் என்கிற எண்ணமே இருக்காது. பென் டிரைவ் சைஸிஸ் மிகச்சிறியதாக இருப்பதால் கையாளுவதும் எளிது. மூன்று இணைப்புகளையும் மடக்கி பாக்கெட்டில் வைத்துக் கொள்ளலாம்.