இரத்த சோகையைப் போக்கும் பம்பளிமாஸ் பழம்

4c8f5f37-ed4d-4119-b8f5-d6def991839f_S_secvpf

பம்பளிமாஸ் பழம் சாத்துக்குடி, ஆரஞ்சு வகையைச் சேர்ந்தது. இந்தப் பழம் பச்சை நிறத்தில் பெரிய பந்து போல இருக்கும். முற்றின காயின் மேல் இளம் மஞ்சள் நிறத்தில் மாறும் அதுதான் பழம். இதன் தோல் அழுத்தமாக காணப்படும். உள்ளே சாத்துக்குடிபோல சுளைகள் இருக்கும். சிலவகை வெள்ளைச் சுளைகளைக் கொண்டிருக்கும்.

சிலவற்றின் சுளைகள் ரோஸ் நிறத்தில் காணப்படும். இந்த இரண்டு வகைப் பழங்களின் குணமும் ஒன்றுதான். இதில் புளிப்பு, இனிப்பு என இரண்டுவகை உண்டு. இதில் புளிப்புவகையை விட இனிப்பு வகையேசிறந்தது. இது அனைத்து காலங்களிலும் கிடைக்காது அதற்கென உள்ள சீசனில் மட்டுமே கிடைக்கும்.

இது குளிர்ச்சி நிறைந்தது எனவே சளி, சீதாள தேகம் உள்ளவர்கள் இதனை சாப்பிடக்கூடாது. பழங்கள் யாவும் உடலுக்கு நேரடியாக சத்துக்களை அளிக்க வல்லவை. உடலுக்குத் தேவையான புரதச்சத்து, நார்ச்சத்து, வைட்டமின்கள் அனைத்தும் பழங்களில் நிறைந்துள்ளன. பழங்கள் உடல் ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் கொடுக்கும்.

தினமும் ஒரு பழமோ அல்லது பழக்கலவையோ சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது. பம்பளிமாஸ் பழம் சாத்துக்குடி, ஆரஞ்சு வகையைச் சேர்ந்தது. இந்தப் பழம் மற்றும் சுளைகள் பெரியதாக இருக்கும்.  பித்த அதிகரிப்பை சரி செய்யும் தன்மை பழங்களுக்கும், கீரைகளுக்கும் உண்டு. இதில் பம்பளிமாஸ் பழம் பித்த அதிகரிப்பை வெகு விரைவில் குறைக்கும்.

இப்பழம் கிடைக்கும் காலங்களில் சாப்பிட்டு வருவது நல்லது. கண் பார்வைக் கோளாறுகள் நீங்க வைட்டமின் ‘ஏ’ சத்து அவசியம். இந்த வைட்டமின் ‘ஏ‘ சத்துக் குறைவதால் மாலைக் கண் நோய் ஏற்பட வாய்ப்புண்டு. இக்குறைகளை களைய பம்பளிமாஸ் பழம் சிறந்த மருந்தாகும். காரட் எப்படி கண்களை காக்கிறதோ அதேபோல் பம்பளிமாஸ் பழமும் காக்கும்.

ஈரல் பாதிப்புகளால்தான் காமாலை நோய் உருவாகின்றது. இந்த காமாலை நோயின் தாக்கம் குறைய பம்பளிமாஸ் பழம் நல்லது. இப்பழம் கிடைக்கும் காலத்தில் அதிகம் வாங்கி சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை நோய் ஏற்படாமல் தடுக்கலாம். கோடைக்காலத்தின் அதிக வெயிலில் அலைபவர்கள், அதிக சூடுள்ள பகுதிகளில் வேலை செய்பவர்களின் உடல் வெகு விரைவில் வெப்பமடையும்.

இவர்கள் பம்பளிமாஸ் பழத்தை சாறு குடித்து வந்தால் உடல் சூடு தணியும். இரத்த சோகையைப் போக்கும் குணம் பம்பளிமாஸ் பழத்திற்கு உண்டு. இந்தப் பழத்தின் சுளைகளை மதிய உணவுக்குப்பின் தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்தச் சோகை குறைபாடு நீங்கும். வயிற்றுப் போக்கு சிலருக்கு அடிக்கடி ஏற்படும்.

இதற்குக் காரணம் தெரியாமல் அடிக்கடி மருத்துவரை நாடுவார்கள். எந்த வகையான மருந்துகள் சாப்பிட்டாலும் இவர்களின் சீதளப் போக்கு அப்படியே இருக்கும். இதற்குக் காரணம் இவர்களின் சீதள தேகம்தான். இவர்கள் பம்பளிமாஸ் பழத்தை சாறு எடுத்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் போக்கு ஏற்படுவது குறையும். வருடத்தில் சில மாதங்களே கிடைக்கும் பம்பளிமாஸ் பழத்தை வாங்கி சாப்பிட்டு வந்தால் உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும்.

Leave a Reply