16 வயது பள்ளி மாணவியை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக ஜப்பான் நாட்டின் பிரபல ஆபாச நடிகை அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
ஜப்பான் நாட்டை சேர்ந்த பிரபல ஆபாச பட நடிகை மனாமி கோகுமா (Manami Gokuma) என்ற நடிகை 16 வயது பள்ளி மாணவியை கட்டாயப்படுத்தி 46 வயது ஆண் ஒருவருடன் விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்த தகவல் அறிந்ததும் ஜப்பான் நாட்டை சேர்ந்த ஒசாகோ போலீஸார் நடிகை மனாமியை கைது செய்தனர். அவர் மீது குழந்தையை பாலியல் குற்றத்தில் ஈடுபடுத்திய பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் இந்த குற்றச்சாட்டை நடிகை மனாமி மறுத்துள்ளார். ஆனால் இணையதளம் மூலம் 46 வயது ஆணுடன் தொடர்பு கொண்ட நடிகை மனாமி அவரிடம் இருந்து பெரும் தொகையை பெற்றுள்ளதற்கு ஆதாரம் இருப்பதாக காவல்துறை தரப்பினர்களிடம் இருந்து கூறப்படுகிறது.
நடிகை மனாமி கோகுமா ஜப்பானில் சுமார் 330 ஆபாச படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.