ஆண்ட்ராய்டு பிரியர்களால் எதிர்பார்க்கப்படும் போன்களில் ஒன்று எனச் சொல்லப்படும் எச்டிசி ஒன் எம் 9 எனும் போன் மார்ச் முதல் தேதி அறிமுகமாகும் எனச் சொல்லப்படுகிறது. இதன் அம்சங்கள் ரகசியமாகவே உள்ளன. ஜெர்மனி இணையதளம் ஒன்றில் இந்தப் புதிய போன் பட்டியலிடப்பட்டு அதன் அம்சங்களும் வெளியாகி இருந்தன. உடனே இந்தப் பக்கம் விலக்கிக்கொள்ளப்பட்டாலும் அதற்குள் இந்த போனின் விவரங்கள் கசிந்துவிட்டன.
அதன்படி இந்த போன் 5 அங்குல திரை கொண்டது என்றும் 32 ஜிபி நினைவுத் திறன், 20 மெகா பிக்சல் காமிரா, அல்டராபிக்சல் முன்பக்க காமிரா உள்ளிட்ட அம்சங்களைக் கொண்டிருக்கும் எனவும் தெரியவந்துள்ளது, எச்டிசி பூம் சவுண்ட், டால்பி ஆடியோ ஆகிய அம்சங்களுடன் ஆண்ட்ராய்ட் லாலிபாப்பும் கொண்டிருக்கும். ஏப்ரல் மாதம் முதல் இது சந்தையில் கிடைக்கலாம் எனக் கூறப்படுகிறது.