இந்தியாவில் லாபகரமாக இயங்கி வரும் ஒருசில விமான நிலையங்களை தனியார் மயமாக்க மத்திய அரசு முயற்சி செய்து வருவதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று சென்னை விமான நிலைய ஊழியர்கள் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னை விமான நிலையத்தை தனியார் மயமாக்க முயற்சி செய்வதாகவும், இதற்காக மத்திய அரசால் அனுப்பி வைக்கப்பட்ட ஆய்வு ஊழியர்களை சென்னை விமான நிலைய ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் செய்திகள் கூறுகின்றன.
மேலும் மத்திய அரசு மற்றும் விமானப் போக்குவரத்து துறை அமைச்சருக்கு எதிராக ஊழியர்கள் முழக்கமிட்டனர். இந்தப் போராட்டத்தில் 500க்கும் மேற்பட்ட விமான நிலைய ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
இதையடுத்தும்,வரும் 11-ம் தேதி நாடு தழுவிய அளவில் ஊழியர்களைத் திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.