இந்திய அரசு விதித்த தடையையும் மீறி ‘இந்தியாவின் மகள்’ ஆவணப்படத்தை நேற்றிரவு பிபிசி தொலைக்காட்சி நிறுவனம் ஒளிபரப்பியது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் தன்னுடைய மகளின் பெயரை வெளிப்படையாக வெளியிட்ட பிபிசி நிறுவனத்தின் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான நிர்பயாவின் தந்தை கூறியுள்ளார்.
பிபிசி ஒளிபரப்பிய இந்த ஆவணப்படம் 59 நிமிடங்கள் 53 வினாடிகள் ஓடுவதாகவும், இந்த ஆவணப்படத்தில் நிர்பயாவின் பால்ய பருவப் படத்தை வெளியிடப்பட்டதோடு அவரது இயற்பெயரையும் வெளிப்படுத்தியிருப்பதாக நிர்பயாவின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார்.
இந்நிலையில், தங்களது வேண்டுகோளை மீறியும் தங்கள் மகளின் பெயர், அவரது சிறுவயது புகைப்படத்தை வெளியிட்டதற்காக சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நிர்பயாவின் தந்தை கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறும்போது, “பிபிசி நிறுவனம் இந்திய அரசுக்கே சவால் விடுத்துள்ளது. இதற்காக அவர்களுக்கு தகுந்த பதிலடி விரைவில் கொடுக்கப்படும்” என்றார்