குழந்தைகள் திருமண தடுப்பு சட்டம் இஸ்லாமியருக்கு பொருந்துமா? சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு.

islamic marriageஇஸ்லாமியருக்கு குழந்தை திருமண தடுப்புச் சட்டம் பொருந்தாது என பதிவு செய்யப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

சென்னையை அடுத்த பெரம்பலூரில் அப்துல்காதர் என்ற இஸ்லாமியர் தனது மகளுக்கு 18 வயதாகும் முன்பே திருமணம் செய்து வைக்க முயன்றார். இதுகுறித்த பதிவு செய்யப்பட்ட வழக்கில் பெரம்பலூர் நீதிமன்றம் இந்த திருமணத்தை தடை செய்தது. இதையடுத்து அப்துல்காதர் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் இஸ்லாமியரான எங்களுக்கு குழந்தை தடுப்பு சட்டம் பொருந்தாது என்றும், தனது மகளின் திருமணத்தை அங்கீகரிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனுமீதான விசாரணை நேற்று நடைபெற்ற போது, தீர்ப்பளித்த ஐகோர்ட் நீதிபதி, “குழந்தை திருமண தடுப்புச் சட்டம், மதபேதமின்றி அனைவருக்கும் பொருந்தும். குழந்தைகள் நலன் மற்றும் அவர்களின் முன்னேற்றமே முக்கியம். எனவே, இஸ்லாமியர் மட்டுமின்றி அனைவருக்கும் இந்த சட்டம் பொருந்தும்” எனக்கூறி அந்த மனுவை தள்ளுபடி செய்தார்.

Leave a Reply