வாக்காளர் அடையாள அட்டையுடன் வாக்காளர்களின் ஆதார அட்டை எண், செல்போன் எண் மற்றும் கைரேகை இணைக்கும் பணியினை தேர்தல் ஆணையம் முடுக்கி விட்டுள்ளது. இதன் மூலம் வரும் தேர்தலில் கள்ள ஓட்டு என்ற பேச்சுக்கே இடமின்றி தேர்தல் நேர்மையாக நடக்கும் என தேர்தல் ஆணையம் நம்புவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்திய குடிமகன்கள் அனைவருக்கும் தற்போது ஆதார் அட்டை என்பது இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது, சமையல் கேஸ் சிலிண்டர் மானியம், வங்கி கணக்கு தொடங்குவது என பல்வேறு பயன்பாட்டுக்கு ஆதார் அட்டை தேவை என்ற நிலை உள்ளது. எனவே வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார அட்டை எண்களையும் இணைத்துவிட்டால் பல்வேறு பிரச்சனைகளை தவிர்த்து விடலாம் என்ற காரணத்தால் இந்த பணியை தொடங்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
வரும் ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி இந்திய சுதந்திர தினத்திற்குள் இந்த பணியை முழுமையாக முடிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகளும் முடுக்கிவிடப்பட்டு உள்ளது என்று துணை தேர்தல் ஆணையர் உமேஷ் சின்கா தெரிவித்து உள்ளார்.