2000 வருடங்களுக்கும் மேலாக பாதுகாத்து வந்த புராதன சின்னங்கள்

  iraqஈராக் மற்றும் சிரியாவில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வரும் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தினர் அவ்வப்போது பணயக்கைதிகளின் கழுத்தை அறுத்து கொலை செய்து வரும் நிலையில் தற்போது அந்நாடுகளில் உள்ள புராதன சின்னங்கள் அடங்கிய கல்வி மற்றும் கலாச்சார மையங்களை தகர்த்து வருகின்றனர். இதற்கு உலகெங்கிலும் இருந்து கடும் கண்டனங்கள் கிளம்பியுள்ளது.

ரோமானியர்கள் சுமார் 2,200 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கிய அரண் நகர் ஹாத்ரா என்ற நகரில் இருந்த புராதன சிலைகளை ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினர் சிதைத்துள்ளனர். ஆயிரம் வருடங்களுக்கும் மேல் பாதுகாக்கப்பட்ட வந்த வரலாற்று சின்னங்களை ஒருசில மணி நேரத்தில் இடித்து தரை மட்டமாக்கிய தீவிரவாதிகளின் செயலுக்கு ஈராக் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பும் தனது கடும் கண்டனத்தை தற்போது பதிவு செய்துள்ளது.

iraq 1

இதுகுறித்து யுனெஸ்கோ தலைமை இயக்குநர் ஐரீனா பொகோவா நேற்று முன் தினம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது:

உலக கலாசாரக் கருவூலமாகக் கருதப்படும் ஹாத்ரா நகரம் அழிக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன. முதலாம் அரபு ராஜ்யத்தின் தலைநகரான ஹாத்ரா, பிற்கால இஸ்லாமிய அரபு நகரங்களின் முன்னோடியாகும். இந்த நகரைத் தாக்கியிருப்பதன் மூலம், இஸ்லாமிய அரபு நகரங்களின் வரலாற்றின் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது.

இராக்கில் நடைபெற்று வரும் கலாசார அழிப்புத் திட்டத்தில், ஹாத்ரா நகர அழிப்பு மிகப் பெரிய திருப்புமுனையாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

iraq 2

Leave a Reply