1 மிமீ உயரமே கொண்ட உலகின் மிகச்சிறிய சிற்பம். இங்கிலாந்தில் சாதனை.

sculptureஇங்கிலாந்து நாட்டை சேர்ந்த சிச்சீஸ்டர் என்ற பகுதியை சேர்ந்த ஒருவர் 1மில்லி மீட்டர் அளவுள்ள உலகின் மிகச்சிறைய சிற்பம் ஒன்றை செய்து உலக  சாதனை செய்துள்ளார்.

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஜாண்ட்டி ஹர்விட்ஸ் என்பவர் உலகின் மிகச்சிறிய சிற்பம் ஒன்றை செய்ய முடிவு செய்து தற்காக பலமாதங்கள் கடுமையாக முயற்சி செய்தார். லேப் டெக்னீஷியன்களின் உதவியோடு அவர் ஒரு மில்லி மீட்டர் உயரமே உள்ள அழகிய சிற்பம் ஒன்றை செய்து முடித்து தற்போது சாதனை படைத்துள்ளார். இந்த சிற்பத்தை உலகின் மிகச்சிறிய சிற்பம் என்பதை இன்னும் சில நாட்களில் கின்னஸ் சாதனையாளர்கள் முன் நிரூபிக்கவும் அவர் முடிவு செய்திருந்தார்.

ஆனால் துரதிஷ்டவசமாக லேப் டெக்னீஷியன் ஒருவர் சிற்பத்தை புகைப்படம் எடுக்கும்போது கை தவறியதால் அந்த சிற்பம் உடைந்துவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மைக்ரோஸ்கோப் மூலம் மட்டுமே காண முடியும் இந்த சிற்பத்டை செய்தவருக்கு 45 வயது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் செய்த சிற்பம் உடைந்துவிட்டதால், மீண்டும் ஒரு மிகச்சிறிய சிற்பம் செய்ய அவர் முடிவு செய்துள்ளார்.

sculpture 1sculpture 2

Leave a Reply