இந்திய அணியின் வெற்றி தொடர்கிறது. அயர்லாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி

Ire vs Indஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் கடந்த நான்கு போட்டிகளிலும் அபார வெற்றி பெற்று வீரநடை போட்டு வரும் இந்திய அணி, இன்றைய போட்டியிலும் அயர்லாந்து அணியை 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளது.

டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரகள் மிகவும் பொறுப்புடன் விளையாடி முதல் விக்கெட்டுக்கு 89 ரன்கள் எடுத்தனர். இருப்பினும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் சொதப்பலான ஆட்டத்தாலும், இந்திய அணியின் அபார பந்துவீச்சு காரணமாக 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 259 ரன்கள் எடுத்தது.

வெற்றி பெற 260 ரன்கள் தேவை என்ற நிலையில் களத்தில் இறங்கிய இந்திய அணி, 36.5 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மட்டும் இழந்து 260 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. தவான் 100 ரன்களும், ரோஹித் சர்மா 64 ரன்களும், விராத் கோஹ்லி 44 ரன்களும், ரஹானே 33 ரன்களும் எடுத்தனர். தவான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

தொடர்ந்து ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

Leave a Reply