தொலைக்காட்சி ஷோ படப்பிடிப்பில் பயங்கர விபத்து. 10 பேர் பரிதாப பலி.

tv show
ஹெலிகாப்டரில் பறந்தபடியே தரையில் இருக்கும் தங்களது தங்குமிடம் மற்றும் உணவு பொருட்களை படம் பிடிக்க வேண்டும் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின் படப்பிடிப்பில் இரண்டு ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதிய விபத்தில் பத்து பேர் பரிதாபமாக பலியாகினர். இவர்கள் இரண்டு பேர் விமானிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சோக சம்பவம் தென் அமெரிக்காவில் உள்ள அர்ஜெண்டினாவில் நடந்துள்ளது.

tv show 5

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஒரு தொலைக்காட்சி நிறுவனம் பிரபலங்களை வைத்து வித்தியாசமான ஷோ ஒன்றை நடத்தியது. இந்த ஷோவில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் ஹெலிகாப்டரில் பறந்தபடியே தங்களுடைய் வீடு மற்றும் அங்கு தயாராக வைக்கப்பட்டிருந்த உணவுப்பொருட்களை அவர்களே படம் பிடிக்க வேண்டும். சிறந்த படத்திற்கு சிறப்பு பரிசும் உண்டு.

tv show 1

இந்நிலையில் அர்ஜென்டினாவில் வடமேற்கில் உள்ள லாரி ரியோஜா மாகாண மலைப்பகுதியில் இந்த ஷோவின் படப்பிடிப்பு நடைபெற்றது. இதில் பிரான்ஸ் நாட்டின் விளையாட்டு வீரர்கள் உள்பட 8 பேர் கலந்து கொண்டனர். இவர்கள் இரண்டு ஹெலிகாப்டரில் வில்லா கேஸ்டெல்லி என்ற இடத்தில் பறந்து சென்ற போது 2 ஹெலிகாப்டர்களும் ஒன்றையொன்று எதிர்பாராத விதமாக ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின.

இதனால் தரையில் விழுந்து அவை நொறுங்கின. இந்த விபத்தில் 2 விமானிகள் உள்பட 10 பேர் பலியாகினர். அவர்களில் 3 பேர் பிரான்சின் பிரபலமான விளையாட்டு வீரர்கள். புளோரன்ஸ் ஆர்தாயுட் பாய்மர படகு வீராங்கனை ஒருவரும் ஆவார். மற்றொருவர் காமில் முபாத். இவர் ஒலிம்பிக் நீச்சல் வீரர். இன்னொருவர் அலெசிஸ் வாஸ்டின். ஓலிம்பிக் குத்துச்சண்டை வீரர். இவர்கள் தவிர மேலும் 5 பேர் பிரான்சை சேர்ந்தவர்கள். இந்த தகவலை பிரான்ஸ் அதிபர் பிரான்கோயிஸ் ஹோலண்டே உறுதி செய்தார்.

tv show 2

விபத்தில் பலியான நீச்சல் வீரர் காமில் முபாத் 2012–ம் ஆண்டு லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் 3 பதக்கம் வென்றவர். அலெசிஸ் 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்றுள்ளார். இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து நடந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

   tv show 3 tv show 4 tv show 6

Leave a Reply