இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க சுசீந்திரன் முடிவு செய்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. தற்போது அவர் விஷால் நடிக்கும் படத்தை பிசியாக இயக்கி வருவதால் அவருடைய உதவியாளர் சேகர் இந்த படத்தை இயக்குவார் என்று கூறப்படுகிறது.
சுசீந்திரனின் ‘ஜீவா’ படத்தில் விஷ்ணுவுக்கு நண்பராக வந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய லக்ஷ்மி நாராயணன், இந்த படத்தின் ஹீரோவாக நடிக்கவுள்ளார். இவர் பாரதிராஜா இயக்கிய அன்னக்கொடி படத்தின் ஹீரோ என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. ஏப்ரல் 23ஆம் தேதி முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும், முதல் பாகத்தில் நடித்த அப்புக்குட்டி, சூரி உள்பட பலரும் இந்த இரண்டாம் பாகத்தில் இடம்பெறுவார்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர், நடிகைகள் குறித்த தகவல்கள் இன்னும் சில நாட்களில் அதிகாரபூர்வமாக வெளிவரவுள்ளது.