லாலிபாப் போன்

micromax_2333087f

ஆண்ட்ராய்டு லாலிபாப்பில் இயங்கக் கூடிய புதிய ஸ்மார்ட் போனை மைக்ரோமேக்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. கேன்வாஸ் பயர் 4 எனும் இந்த போன் ரூ.6,999 விலையில் கிடைக்கிறது.

4.5 அங்குலத் திரை கொண்ட இது கோரிங் கொரில்லா கண்ணாடி பாதுகாப்பையும் கொண்டிருக்கிறது. 1 ஜிபி ரேம், 8 ஜிபி சேமிப்பு திறன் கொண்டது. மைக்ரோ எஸ்டி கார்டு வசதியும் உள்ளது.

8 மெகா பிக்சல் பின் பக்க காமிரா, 2 மெகா பிக்சல் முன்பக்க காமிராவுடன் 2,000 எம்.ஏ.எச் பேட்டரியும் கொண்டிருக்கிறது. கேன்வாஸ் பயர் வரிசையில் அமைந்துள்ளது.

ஆண்ட்ராட்ய் லாலிபாப் 5.0-ல் இயங்குவதுடன் கிளின் மாஸ்டர், ஆப் செண்டர், ஆஸ்க் மீ,பேடிஎம் மற்றும் குவிக்கர் ஆகியவை பிரிலோடு செய்யப்பட்டுள்ளன.

Leave a Reply