ராகுல் காந்தி எங்கே? நீடிக்கும் குழப்பத்தால் பெரும் பரபரப்பு.

rahul-m3கடந்த வருடம் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல் மற்றும் சமீபத்தில் நடந்த டெல்லி சட்டசபை தேர்தல் உள்பட அனைத்து தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததை அடுத்து காங்கிரஸ் தொண்டர்கள் மனதளவில் பலவீனம் அடைந்துள்ளனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் மற்றும் சோனியா காந்தியின் மகனுமானராகுல்காந்தி திடீரென விடுமுறை எடுத்துக்கொண்டு டெல்லியை விட்டு வெளியேறினார்.

ராகுல்காந்தி எங்கே தங்கியுள்ளார் என்பது குறித்து அதிகாரபூர்வமான தகவல் எதுவும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களுக்கே சரியாக தெரிவியவில்லை. காங்கிரஸ் கட்சித் தலைமை பொறுப்பை ராகுல் காந்தி விரும்பியதாகவும், ஆனால் அதற்கு சோனியா காந்தி சம்மதிக்காததால், அவர் கோபித்துக் கொண்டு சென்றதாக தகவல்கள் பரவியது. மேலும் காங்கிரஸ் கட்சியினரே, ராகுல் காந்தி பற்றிய பரபரப்பு சுவரொட்டிகளை ஒட்டியதால் சர்ச்சை மேலும் தீவிரம் அடைந்தது.

எனவே இதுகுறித்து விளக்கம் அளித்த காங்கிரஸ் தலைமை ”ராகுல் காந்தி அரசியலை விட்டு போகவில்லை என்றும் அவர், புதிய அரசியல் பயணத்தை மேற்கொள்வதற்காக, சில ஆழ்மனப்பயிற்சிகளை கற்றுக்கொள்வதற்காக வெளிநாடு சென்றுள்ளதாகவும் கூறினர்.

ஆனால் ராகுல் காந்தியிடம் இருந்தும் இதுவரை எந்தவித பதிலும் அதிகாரபூர்வமாக வரவில்லை என்பதால் காங்கிரஸ் தொண்டர்கள் கவலை அடைந்துள்ளனர். மேலும் விடுமுறையை முடித்துவிட்டு ராகுல் காந்தி நேற்று டெல்லி திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் டெல்லி திரும்பியது குறித்து எந்தவித தகவலும் இல்லை. இதனிடையே ராகுல் காந்தி, தனது விடுமுறையை மேலும் நீட்டித்து உள்ளதாகவும், இந்த வார இறுதியில் அவர் டெல்லி திரும்புவார் என்றும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply