அதிமுக ஆதரவுடன் நிலம் கையகப்படுத்தும் மசோதா நிறைவேறியது.

land billமத்திய அரசு தாக்கல் செய்த நிலம் கையகப்படுத்துதல் சட்ட மசோதா 2 நாட்கள் விவாதத்திற்கு பின்னர் வெற்றிகரமாக லோக்சபாவில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. இந்த சட்டத்திற்கு அதிமுக எம்.பிக்கள் அனைவரும் ஆதரவளித்து ஓட்டளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உள்பட முக்கிய எதிர்க்கட்சிகள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தன என்பது குறிப்பிடத்தக்கது.

பாரதிய ஜனதா கட்சியின் நெருங்கியதோழமை கட்சியான சிவசேனா வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. முதலில் எதிர்ப்பு தெரிவித்த அகாலி தளம் கட்சி கடைசி நேரத்தில் எதிர்ப்பை கைவிட்டது.

இந்த மசோதா வாக்கெடுப்புக்கு வந்தபோது, காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், பிஜு ஜனதா தளம், தெலங்கானா ராஷ்டிர சமிதி ஆகியவை வெளிநடப்பு செய்தன.

 லோக்சபாவில் ஆளும் கூட்ட ணிக்கு பெரும்பான்மை இருந்ததால், இந்த மசோதா மிக எளிதாக நிறை வேறியது. ஆனால் ராஜ்ய சபாவில் பாஜக கூட்டணிக்கு போதிய பலம் இல்லாததால் பிற கட்சிகளின் ஆதரவை கோரியுள்ளது.

Leave a Reply