தமிழகத்தின் இரண்டு ESI மருத்துவக்கல்லூரிகளை தமிழக அரசே ஏற்று நடத்தும். ஓ.பன்னீர்செல்வம்

 ESIC-medical-collegeசென்னை மற்றும் கோவையில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரிகளை மூட தொழிலாளர் அரசு ஈட்டுறுதி கழகம் முடிவு செய்துள்ளதால், அந்த இரண்டு மருத்துவக்கல்லூரிகளையும் தமிழக அரசு ஏற்று நடத்த முடிவு செய்துள்ளதாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் அனுப்பியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் அனுப்பிய கடித்ததில், சென்னை மற்றும் கோவையில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரிகளை ஏற்று நடத்துவது தமிழக அரசு கொள்கை முடிவு மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு மருத்துவ சேவையும், காப்பீடும் வழங்குவதற்காக தொடங்கப்பட்ட தொழிலாளர் அரசு ஈட்டுறுதிக் கழகத்தின் (இ.எஸ்.ஐ) சார்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நாடு முழுவதும் 21 மருத்துவக் கல்லூரிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, அவற்றில் 11 மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.

இவற்றில் ஒரு கல்லூரி சென்னையில் செயல்படுகிறது. கோவையில் மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட்டு விட்ட நிலையில் இன்னும் திறக்கப்படவில்லை. ஒரு சில ஆண்டுகள் மட்டுமே நடத்தப்பட்ட நிலையில், நிதி நெருக்கடி காரணமாக மருத்துவக் கல்லூரிகளை மூட தொழிலாளர் அரசு ஈட்டுறுதிக் கழகம் முடிவு செய்தது.

இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டில் உள்ள 2 இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிகள் உள்பட நாடு முழுவதும் உள்ள 13 இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிகளை அந்தந்த மாநில அரசுகளுக்கு வழங்கத் தயாராக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், சென்னை மற்றும் கோவையில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரிகளை தமிழக அரசு ஏற்று நடத்த முடிவு செய்துள்ளதாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் அனுப்பியுள்ளார்.

அவ்வாறு தமிழக அரசு ஏற்று நடத்தும்பட்சத்தில், இரு கல்லூரிகளின் மாணவர் சேர்க்கையில் 85% தமிழக அரசுக்கும், எஞ்சிய 15% அனைத்திந்திய அளவுக்கும் ஒதுக்கீடு பகிரப்படும் என்று அந்தக் கடித்ததில் முதல்வர் ஓ.பி.எஸ். சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், தமிழக அரசின் இந்த முடிவை, சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் ஏற்றுக்கொள்வதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்குமாறு, அந்தக் கடிதத்தில் பிரதமர் மோடியை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார்

Leave a Reply