நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதீஷ்குமார் வெற்றி.

nitesh kumarபிகார் சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தள அரசு வெற்றி பெற்றது.

 கவர்னர் உரையுடன் பிகார் சட்டப்பேரவை நேற்று தொடங்கியதும் மாநில அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்புக்கான தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 140 உறுப்பினர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதீஷ் குமார் தலைமையிலான அரசுக்கு ஆதரவு அளித்து வாக்களித்தனர்.

பாரதிய ஜனதா கட்சி நம்பிக்கை வாக்கெடுப்பைப் புறக்கணித்து சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தது. இதையடுத்து, சபாநாயகர் உதய் நாராயண் செüத்ரி குரல் வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டார். ஆனால் அதற்குப் பதிலாக “நேரடி வாக்கெடுப்பு’ நடத்துமாறு ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தள உறுப்பினர்கள் வலியுறுத்தனர். அதைத் தொடர்ந்து நேரடி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. வாக்கெடுப்பை பிகார் முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மாஞ்சியும் புறக்கணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply