பிரதமர் மோடி மொரிஷியஸ் பயணம். முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து.

modi in Mauritiusமொரீஷியஸ் நாட்டின் பொதுகட்டுமான திட்டங்களை மேம்படுத்த 500 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் உதவி வழங்குவதாக அந்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்க்கொண்டுள்ள பாரத பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

மேலும் இந்தியாவுக்கும், மொரீஷியசுக்கும் இடையே 5 முக்கிய வர்த்தக ஒப்பந்தங்களில் நேற்று இரு நாட்டு தலைவர்கள் கையெழுத்திட்டனர். மேலும் கடல் வர்த்தக மேம்பாடு, விசா கட்டண குறைப்பு, புதிய சைபர் நகரம் உருவாக்கம் என பல சலுகைகளையும் மொரிஷியஸ் நாட்டிற்கு இந்தியா அறிவித்துள்ளது.

மொரீஷியஸ் நாட்டு அதிபருடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்னர் பிரதமர் மோடி பேசுகையில் “பாதுகாப்பு தொடர்பான விஷயங்கள் தான் இருநாடுகளின் நட்புறவுக்கு அடிப்படை காரணமாகும். மொரீஷியஸின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் இந்தியா முதலில் கவனம் செலுத்தும். மேலும் வரி ஏய்ப்பு தொடர்பான விஷயங்களில் மொரீஷியஸ் அரசு, முழு ஒத்துழைப்பு தருவதாக உறுதியளித்திருப்பது எனக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது” என்று கூறினார். இந்தியர்களின் கருப்பு பணம் மொரீஷியஸ் மூலமாக இந்தியாவில் கள்ளத்தனமாக முதலீடு செய்யப்படுவதாக சந்தேகிக்கப்படுகிறது.

மொரீஷியஸ் பிரதமர் அனெரூத் ஜீக்நாத் பேசும் போது, “இந்தியாவின் இரட்டை வரி விதிப்பு முறையில் உள்ள சிக்கல்கள் பற்றி மோடியுடன் பேசினேன். இது எங்கள் நாட்டின் வர்த்தகத்தில் பாதிப்புகளை ஏற்ப்படுத்தும். இதில் தீர்வு காண்பதற்கு மோடியின் ஆதரவு எங்களுக்கு தேவை” என்று கூறினார்.

இன்று மொரிஷியஸ் நாட்டில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்துக்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply