உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி. 146 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அபார வெற்றி.

cricketஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் தென்னாப்பிரிக்க அணி, ஐக்கிய அரபு எமிரேட் அணியை 146 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

டாஸ் வென்ற ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி, முதலில் பந்துவீச தீர்மானித்தது. எனவே முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 341 ரன்கள் குவித்தது. டிவில்லியர்ஸ் 99 ரன்களும், மில்லர் 49 ரன்களும், பிகார்டியன் 64 ரன்களும் எடுத்தனர்.

வெற்றி பெற 342 ரன்கள் தேவை என்ற நிலையில் களத்தில் இறங்கிய ஐக்கிய அரபு எமிரேட் அணி, தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர்களின் புயல்வேக பந்துவீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் 195 ரன்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. 99 ரன்கள் எடுத்த டிவில்லியர்ஸ் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் தென்னாப்பிரிக்க அணி 8 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்திய அணி 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply