‘உத்தம வில்லன் ரிலீஸ் ஒத்திவைப்புக்கு காரணம் என்ன? திடுக்கிடும் தகவல்.

kamal and linguகமல்ஹாசன் நடித்த உத்தம வில்லன் திரைப்படம் ஏப்ரல் 2ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என கமல்ஹாசனே யூடியூப் இணையதளத்தின் மூலம் அறிவித்தார். படத்தின் பணிகளும் திருப்திகரமாக முடிந்து ஏப்ரல் 2ஆம் தேதி ரிலீஸுக்கு தயாராகத்தான் இருந்தது. ஆனால் திடீரென ரிலீஸ் தேதியை தள்ளி வைத்ததற்கு காரணம் கமல்-லிங்குசாமி இடையே நடந்த மோதல்தான் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

‘உத்தம வில்லன்’ படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம்தான் முழுக்க முழுக்க தயாரித்துள்ளது. இந்த படத்தின் செலவை ஒரு பைசா கூட கமலின் ராஜ்கமல் நிறுவனம் செலவு செய்யவில்லை. கமல் மட்டும் நடித்ததற்கு இன்னும் சம்பளம் வாங்கவில்லையாம். நிலைமை இப்படியிருக்க அனைத்து விளம்பரங்களிலும் தன்னுடைய ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனத்தையும் இணைத்து விளம்பரம் செய்ய கமல் வற்புறுத்துவதாகவும், இதனால் ஏற்பட்ட பிரச்சனை காரணமாகவே படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டதாகவும் தற்போது செய்திகள் வெளிவந்துள்ளது.

ஏற்கனவே படத்தின் அனைத்து துறைகளில் அவர் தலையிட்டதாக ரமேஷ் அரவிந்த் அதிருப்தியில் இருக்கும் நிலையில் தற்போது லிங்குசாமியும் கமலின் மீது அதிருப்தியில் இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. படம் நன்றாக ஓடிவிட்டால் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் ஆளவந்தான், மும்பை எக்ஸ்பிரஸ் போல ஆகிவிட்டால் தயாரிப்பாளரின் நிலைமை படுதிண்டாட்டம்தான் என்கிறது கோலிவுட் செய்திகள்.

Leave a Reply