உலகின் அதிக பணக்காரர்களை கொண்ட நாடுகள். இந்தியாவுக்கு 7வது இடம்

indiaஉலகில் பணக்காரர்கள் அதிகம் உள்ள நாடுகள் குறித்து சமீபத்தில் ஒரு தனியார் நிறுவனம் எடுத்த கருத்துக்கணிப்பு ஒன்றில் இந்தியா ஏழாவது இடத்தை பெற்றுள்ளது.

பிரபல தனியார் நிறுவனமான நைட் பிராங்’ என்ற நிறுவனம் கடந்த 2014ஆம் ஆண்டில் உலகில் அதிக பணக்காரர்கள் உள்ள நாடுகள் குறித்து ஒரு சர்வே எடுத்தது. இந்த சர்வேயின்படி இந்தியாவில் 104 சதவிகிதம் பணக்காரர்கள் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. வரும் 2024ஆம் ஆண்டிற்குள் இந்த சதவிகிதம் பலமடங்கு அதிகரிக்கும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் பெரும் பணக்காரர்களில் ஏராளமானோர் மும்பையைச்  சுற்றி வாழ்வதால், உலகளவில் மல்டி மில்லினியர்கள் வாழும் நகரங்களின் வரிசையில் மும்பை 6 ஆவது  இடத்தை பெற்றுள்ளது என்றும் அந்த சர்வே கூறுகிறது. மும்பையை அடுத்து அதிக பணக்காரர்களைக் கொண்ட நகரங்களாக புதுடெல்லி, ஹைதராபாத் ஆகிய நகரங்கள் இடம்பெற்றுள்ளன.

உலகளவில் அதிக பணக்காரர்களை கொண்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தையும், சீனா இரண்டாவது இடத்தையும், ரஷ்யா மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.

இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருவதும், அன்னிய முதலீட்டின் அளவு தொடர்ந்து அதிகரி்த்து வருவதும் பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை அதிகரிக்க காரணம் என்று தெரிய வந்துள்ளது.

Leave a Reply