உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: நியூசிலாந்து-வங்கதேசம் மோதல்.

cricketஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் நியூசிலாந்து எதிரான போட்டி ஒன்றில் வங்கதேச அணி 288 ரன்கள் அடித்துள்ளது. இந்த இலக்கை நோக்கி தற்போது நியூசிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது.

டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இதனால் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 288 ரன்கள் எடுத்துள்ளது. கடந்த போட்டியில் சதமடித்து அபாரமாக விளையாடி மகமுதுல்லா இந்த போட்டியிலும் சதம் அடித்தார். அவர் 12 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்களுடன் 128 ரன்கள் குவித்துள்ளார். மேலும் செளம்யா சர்க்கார் 51 ரன்களும், சபீர் ரஹ்மான் 40 ரன்களூம் அடித்துள்ளனர்.

வெற்றி பெற 289 ரன்கள் தேவை என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 48.5 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 290 ரன்கள் எடுத்து மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  குப்தில் 105 ரன்களும், டெய்லர் 56 ரன்களும் எடுத்தனர். குப்தில் ஆட்டநாயகன் விருதை பெற்றார். இந்த வெற்றியின் மூலம் அனைத்து லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்று நியூசிலாந்து அணி 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

Leave a Reply