பிரான்ஸ் நாட்டில் நடைபெற இருக்கும் ஒரு பொதுக்கூட்டம் ஒன்றில் மக்களை சந்திக்கும் நிகழ்ச்சியில் வரும் 21ஆம் தேதி போப்பாண்டவர் கலந்து கொள்ள இருக்கின்றார். போப்பாண்டவர் பிரான்ஸ் வரவிருப்பதை அடுத்து அவருக்கு வரவேற்பு பேனர்கள் , கட் அவுட்டுக்கள் ஆகியவை நாடு முழுவதும் வைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஒரு ஆடை நிறுவனம் ‘ஜீன்ஸ் அணிந்த கன்னியாஸ்திரி ஒருவர் மேலாடை இல்லாமல் தனது கைகளால் மார்பு பகுதியை மறைத்து போஸ் கொடுத்துள்ள விளம்பர கட் அவுட்டை ஒன்றை நேபிள்ஸ் நகரின் மையத்தில் வைத்துள்ளது. அருவருப்பான விளம்பர தந்திரத்திற்காகவே இந்த விளம்பர பலகை வைத்துள்ளதாக இந்த விளம்பர பலகைக்கு அந்நாட்டில் பலத்த எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.
ஆனால் இந்த குற்றச்சாட்டை அந்த ஆடை நிறுவனம் மறுத்துள்ளது. வியாபார உத்தியில் மேற்கொள்ளபட்டதே தவிர வேறு எந்தவித நோக்கமும் இல்லை என்றும், போப்பின் வருகைக்கும் இந்த விளம்பரத்திற்கு சம்பந்தமில்லை என்றும் கூறப்படுகிறது.