இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சேவை சந்தித்துள்ளார். கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
மோடியின் இலங்கைக்கான பயணத்தின்போது ஏற்பாடு செய்யப்பட்ட 40க்கும் மேற்பட்ட சந்திப்புகளின் இறுதிச் சந்திப்பாக இது அமைந்தது என இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் செய்யது அக்பருதீன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இரு நாட்கள் பயணம் மேற்கொண்டு இலங்கை வந்த பிரதமர் மோடி, இந்தியா பயணமாகதாக விமான நிலையச் செய்திகள் தெரிவிக்கின்றன.
5 நாள் அரசு முறை பயணமாக இந்திய பெருங்கடல் நாடுகளான சீசெல்ஸ், மொரீஷியஸ் மற்றும் இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு சென்ற பிரதமர் மோடி நள்ளிரவில் தலைநகர் டெல்லி திரும்பினார்.