ஈராக் நாட்டில் மூன்று நபர்கள் ஹோமோசெக்ஸ் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு அவர்களுக்கு பொதுமக்கள் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. நேற்று இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வருகிறது.
ஈராக் நாட்டில் ஐ.எஸ்.ஐ.எஸ் கட்டுப்பாட்டில் உள்ள வடபகுதி நகரங்களில் ஒன்றில் மூன்று நபர்கள் அருகில் உள்ள நபர்களோடு ஹோமோசெக்ஸ் நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படது.
இஸ்லாமிய வயதான தலைவர் ஒருவர் மூவருக்கும் மரண தண்டனை அளிப்பதை உறுதி செய்யும் வாசகத்தை வாசிக்க அதை தொடர்ந்து மூவரையும் பொதுமக்கள் முன்னிலையில் பெரிய கத்தி ஒன்றினால் கழுத்தை வெட்டி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இந்த புகைப்படங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகின் பல நாட்டு தலைவர்கள் மரணதண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இந்த நடவடிக்கைகளுக்கு ஈராக் அரசு உள்பட உலக நாட்டு தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.